உள்நாடு

மின்கட்டணம் அதிகரிக்கப்படும் : முன்மொழிவுகள் ஆராயப்படுகிறது

(UTV | கொழும்பு) –  ஒவ்வொரு மின் அலகுக்கும் 13 ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் மின் கட்டணத்தினை அதிகரித்து 14 பில்லியன் ரூபாவினை மேலதிக வருமானமாக பெற்றுக் கொள்ள இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை கிடைக்கப்பெற்றதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார். இந்த முன்மொழிவு ஆய்வு செய்யப்பட்டு திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்படும் என தலைவர் கூறினார்.

அதன்படி இதுவரை 30 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.50 இற்கு வழங்கப்பட்டு வந்தது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக முப்பது ரூபாய் வசூலிக்கப்பட்டது. புதிய பிரேரணையின் பிரகாரம் அலகு ஒன்றுக்கான விலை ரூ.5.50 இனால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் நிலையான கட்டணம் 290 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது. இதன்படி, ஏழு வகைகளின் கீழ் வீட்டு உபயோகத்தில் மின் நுகர்வுக்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.

அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், கடைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கான விலைகள் திருத்தப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில் குறைந்தபட்சம் 38% அதிகரிப்பும், ஹோட்டல்களுக்கான மின் கட்டணத்தில் 23% அதிகரிப்பும், அரசு நிறுவனங்களில் 22% அதிகரிப்பும் இருக்கும் எனவும் முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை எட்டு வருடங்களுக்கு முன்னர் மின்சார கட்டணத்தை அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

கொரோனா தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

கல்வித் தகைமைகளை சமர்ப்பிக்க தயார் – சஜித் பிரேமதாச

editor

வாகன இறக்குமதியை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!