உள்நாடு

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நாளை முதல் பூட்டு

(UTV | கொழும்பு) – மசகு எண்ணெய் இன்மையால், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம், நாளை இரவு முதல் மீளவும் மூடப்பட உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னரும், போதுமான அளவு மசகு எண்ணெய் கிடைக்காமையால், இரண்டு சந்தர்ப்பங்களில், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்தது.

இதேநேரம், இன்றைய தினம் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பெட்ரோலியக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு இன்று ஜனாதிபதி மாளிகைக்கு

லங்கா  சதொச 04 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைத்துள்ளது

இலங்கையில் கொரோனா பரவாத மாவட்டம்