(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலை பதவி விலகுமாறு கோரியதாக வெளியான செய்திகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்,
ஆளுநர் கப்ரால், ஜனாதிபதியின் பூரண நம்பிக்கையை கொண்டிருப்பதாகவும், நாடு எதிர்நோக்கும் பாரிய பொருளாதார சவால்களுக்குப் பதிலளிப்பதில் பலத்தின் கோபுரமாகவும் திகழ்ந்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அதிகாரிகள் தொடர்பில் கலந்துரையாடவில்லை எனவும், ஆளுநர் கப்ராலும் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில் பண விவகாரங்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
குறும்புத்தனமான மற்றும் போலியான கதைகளால் மனம் தளர வேண்டாம் என்றும், நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக தனது அனைத்து முக்கியப் பணிகளைத் தொடருமாறும் ஆளுநர் கப்ராலிடம் தாம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்துவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.