(UTV | கொழும்பு) – புதிய பேரூந்து கட்டண திருத்தத்தின் கீழ் பேரூந்து உரிமையாளர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் மட்டுமே கிடைத்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டுகின்றது.
இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் அஞ்சன பிரியஞ்சித் எம்மிடம் கருத்துத் தெரிவிக்கையில்;
“அரசினால் டீசல் விலை உயர்த்தப்பட்டதனை தொடர்ந்து அரசு பேரூந்து துறையினருக்கு மிகவும் குறைந்தளவிலான பேரூந்து கட்டண திருத்த முறையினை வழங்கியுள்ளது. அந்த கட்டண திருத்தமானது ஒருபோதும் நாளந்த தேவைகளை போர்த்தி செய்ய முடியுமாக அமையாது. நாம் நம்புகிறோம், எதிர்வரும் நாட்களில் பேரூந்து சேவையின் நிலையினை ஆராய்ந்து வருவாய் நிலை, நட்டம் தொடர்பில் கவனம் செலுத்தி தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் ஒன்றினை விரைவில் அறிவிப்போம்..” எனத் தெரிவித்திருந்தார்.
- ஆர்.ரிஷ்மா