உள்நாடு

அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்கவும்

(UTV | கொழும்பு) – அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்துவரும் சில வாரங்களில், ஒரு கிலோகிராம் அரிசியின் விலை, 200 ரூபா என்ற எல்லையைக் கடக்கும் என சிறு மற்றும் மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாரியளவான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி உற்பத்தியாளர்களுக்கு சாதகமான வகையில் அரசாங்கம் செயற்படுகின்ற காரணத்தினால், இந்த நிலை ஏற்படுவதாக அந்தச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதேநேரம், தற்போதைய நிலையில், அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என அரிசி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் நெருக்கடியால், அதிகரிக்கும் அரிசி விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம்

பிரதான 14 உற்பத்திகளுக்கான உத்தரவாத விலை நிர்ணயம்

கிழக்கு நிருவாக பிரச்சினை: ஜனாதிபதிக்கு தக்க பதிலடி வழங்கப்படும் – இம்றான் மஹ்ரூப்