உள்நாடு

இன்றும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, A B C D E F G H I J K L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணி நேரமும்,

மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள், 2 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், P Q R S T U V W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், காலை 8.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதிக்குள் 3 மணி நேரமும்,

மாலை 5.30 முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஹபாயா சர்ச்சைக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி!

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு!

இன்றும் மழையுடனான வானிலை