உலகம்

மீண்டும் சீனாவில் தலைதூக்கும் கொரோனா

(UTV |  பீஜிங்) – நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக சீனாவின் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டது சீனாவில்தான். அங்குள்ள வுஹான் நகரில் உருவான இந்த வைரஸ் உலகெங்கும் பரவி, ஒவ்வொரு அலையாக உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது.

கொரோனாவின் முதல் அலையின்போதே நாடு தழுவிய முழு ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடு, அதிகளவு பரிசோதனை உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி சீன அரசு நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது.

Related posts

தனக்கென சொந்த சமூக வலைத்தளம்

கட்டுப்பாடுகளை இறுக்கும் இத்தாலி

இந்தோனேஷியாவில் மிகப்பெரிய எரிமலை சீற்றம்