உள்நாடு

லஞ்ச் ஷீட்கள் மற்றும் பொலிதீன் பைகளது விலைகளும் உயர்வு

(UTV | கொழும்பு) – மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பொலிதீன் பை விலை ஒன்று முதல் ஏழு ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், லஞ்ச் சீட் ஒன்றின் விலை ஒரு ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மறுசுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மூன்று மாதங்களாக மூலப்பொருட்களை உரிய முறையில் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் 500 தொழிற்சாலைகள் உற்பத்தி நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாகவும் இதன் விளைவாக, சுமார் 15,000 பேர் வேலை இழந்துள்ளனர் என்று சங்கத்தின் செயலாளர் அனுர ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது சுமார் 400 தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும், நாளாந்த உற்பத்தியை மேற்கொள்வதற்கு போதிய மூலப்பொருளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒரு கிலோ மூலப்பொருளின் விலை 500 ரூபாவிலிருந்து 750 ரூபாவாக அதிகரித்துள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இதனால் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு பொலிதீன் பையின் மொத்த விற்பனை விலை 02 ரூபாவாகவும், 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு பையின் விலை 09 ரூபாவாகவும், 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு பையின் விலை 17 ரூபாவாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சந்தையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொலிதீன் பைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், தற்போதுள்ள விதிகளின்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த பொலிதீன் பைகளை விற்பனை செய்ய முடியாது என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.

மேலும், 2.50 ரூபாயாக இருந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த லஞ்ச் சீட்டின் விலை, 3.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், சுற்றுச்சூழல் உகந்ததல்லாத லஞ்ச் சீட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

கட்டுநாயக்க சம்பவம் : கூச்சலிட்ட பயணிதை காணவில்லை

போதைப்பொருள் வர்த்தகம் – STF உத்தியோகத்தர் ஒருவர் கைது.

IMF மற்றும் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த நிதியமைச்சர் அமெரிக்காவுக்கு