உள்நாடு

மின்சாரக் கட்டணத்தினை அதிகரிக்க தீர்மானம் முன்வைப்பு

(UTV | கொழும்பு) – மின்சாரக் கட்டணத்தை துரிதமாக அதிகரிக்க வேண்டுமென இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.

பணிப்பாளர் சபையின் தீர்மானம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான விலை அறிக்கையை இலங்கை மின்சார சபை தற்போது தயாரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

எவ்வாறாயினும், அலகு ஒன்றின் விலையை 250 ரூபாவிலிருந்து 15 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சார நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் டீசலை பெற்றுக் கொள்வதற்கும் 4,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை இலங்கை மின்சார சபை செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அழைப்பாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.

அவசர மின்சாரம் வாங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதன்படி 200 மெகாவாட் வாங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

IMF அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் கவனம்

UPDATE: கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் காணாமல் போன நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்பு

‘எவர்கிவன்’ சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க ஆரம்பித்துள்ளது