உள்நாடு

எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயு குறித்து இன்று தீர்மானிக்கும்

(UTV | கொழும்பு) – இலங்கையில் உள்ள திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) நிறுவனங்கள், சமையல் எரிவாயுவின் விலையை தீர்மானிக்க இன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு எரிவாயுவை விற்பனை செய்வதன் மூலம் பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும், இருண்ட பொருளாதார சூழ்நிலையில் சிலிண்டருக்கு ரூ. 1000 நஷ்டமாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

டொலரின் மதிப்பு உயர்வு மற்றும் சர்வதேச அளவில் எரிவாயுவுக்கான விலை அதிகரிப்பு ஆகியவை குறித்த சுமையை அதிகரித்துள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஷிப்பிங் இன்சூரன்ஸ் பிரீமியங்களின் அதிகரிப்பு மற்றும் எரிபொருள் அதிகரிப்பால் போக்குவரத்து செலவுகள் ஆகியவை இழப்புகளை ஏற்படுத்திய மற்ற காரணிகளாகும் எனவும் குறித்த நிறுவனங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

தற்போது விலைக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால், விலை நிர்ணயம் குறித்து நிறுவனங்களே முடிவு செய்ய வேண்டும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது. திரவ பெட்ரோலிய எரிவாயு விலையை உயர்த்துவதற்கான முன்மொழிவு கிடைக்கவில்லை என்று குறித்த ஆணையம் தெரிவிக்கின்றது.

Related posts

அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது

அனைத்து விமானிகள் வெளியேறினாலும் பரவாயில்லை – வெளிநட்டவர்களை வைத்து இயக்குவோம் – அமைச்சர் நிமல்

இரு அமைச்சுகளின் விடயதானங்களில் மாற்றம்