(UTV | கொழும்பு) – இன்றைய தினம் மின்வெட்டை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின் மின்வெட்டை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.