உலகம்

பராக் ஒபாமாவுக்கு கொவிட் -19 தொற்று உறுதி

(UTV | வொஷிங்டன்) –  அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கொவிட் -19 தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், “எனக்கு இரண்டு நாட்களாக தொண்டை அரிப்பு இருந்தது, ஆனால் நான் நன்றாக உள்ளேன்” என்று அவர் கூறினார். ஒபாமா தனது மனைவியும், முன்னாள் முதல் பெண்மணியுமான மிச்செல் ஒபாமாவுக்கு பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

60 வயதான ஒபாமா, குளிர்காலத்தின் பெரும்பகுதியை ஹவாயில் கழித்த பின்னர், சமீபத்தில் வாஷிங்டன், டிசி திரும்பினார். அவர் டிசியில் கொவிட் சோதனை செய்ததாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

நவாஸ் ஷெரீப்புக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு இலங்கையருக்கு கொரோனா தொற்று

கலிபோர்னியா மீண்டும் முடக்கம்