உள்நாடு

இன்று முதல் உணவுப் பொதிகளின் விலை, பாண் விலை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் என்.எஸ். கே. ஜயவர்தன தெரிவிக்கையில்; பாண் ஒன்றின் விலை 20 முதல் 30 ரூபா வரை அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.

இதன்படி தற்போது 70 ரூபாவாக உள்ள பாண் ஒன்றின் விலை 100 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.

பன் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோதுமை மா விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் , உணவுப் பொதி (சோற்றுப் பொதி) , கொத்து, மற்றும் ஷார்ட் ஈட்ஸ் ஆகியவற்றின் விலைகள் வெள்ளிக்கிழமை (11) முதல் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உணவுப் பொதி ஒன்றின் விலை ரூ.20/-, கொத்து ரொட்டி ரூ. 10/-, மற்றும் ஷார்ட் ஈட்ஸ் ரூ 5/- வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையின் சட்டவரைபுகள் குறித்து ஐ.நா – கவலை.

இன்றும் சீரற்ற வானிலை

மேலும் 200 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி