(UTV | கொழும்பு) – லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று எரிபொருள் விலையை உயர்த்தியதை அடுத்து, CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் நீளம் அதிகரித்து வருவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் பிரசன்ன விபுலகுண, எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இன்றும் பேருந்துகள் வரிசையாக நிற்பதாக தெரிவித்திருந்தார்.
புதிய கட்டணத்தில் IOC எரிபொருள் நிலையங்களில் இருந்து எரிபொருளை செலுத்துவதைத் தவிர பெரும்பாலான பஸ் உரிமையாளர்கள் வேறு வழியின்றி இருப்பதாக விபுலகுண குறிப்பிட்டிருந்தார்.
CEYPETCO நிறுவனமும் எரிபொருள் விலையை உயர்த்தினால் போக்குவரத்துத் துறையே வீழ்ச்சியடையும் என்று அவர் எச்சரித்தார்.