(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்புகளை விடுவிப்பதற்கு டொலர்கள் செலுத்தப்படாமையால் முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முற்றத்தில் இருந்து சந்தைக்கான எரிவாயு விநியோகம் இன்று (10) முதல் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று நாட்களுக்கு முன்னர் இறக்கப்பட்ட 2,500 மெற்றிக் தொன் எரிவாயு விநியோகம் நிறைவடைந்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 7,000 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்கள் இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் ஒரு வாரமாக நங்கூரமிடப்பட்டுள்ளன.
இரண்டு கப்பல்களிலும் உள்ள எரிவாயுவை வெளியிடுவதற்கு டொலர்களை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கியிடம் நிறுவனம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.