(UTV | கொழும்பு) – இலங்கைக்கான LNG விநியோக திட்டத்தை திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி நிறுவனம் (New Fortress Energy) தெரிவித்துள்ளது.
யுகதனவி உடன்படிக்கைக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தமைக்கு பின்னர் குறித்த நிறுவனத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிற்கு அருகே எல்என்ஜி முனையத்தை நிர்மாணிக்க நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி நிறுவனமும் இலங்கை அரசாங்கமும் செப்டம்பர் 2021 இல் ஒப்பந்தம் செய்து கொண்டதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலைய வளாகத்திற்கு எரிவாயு விநியோகிக்கும் உரிமை நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி நிறுவனத்துக்கும் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை அரசாங்கத்திற்கு நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி நிறுவனமானது ஆரம்பத்தில் 1.2 மில்லியன் கேலன் எல்என்ஜி இனை தினசரி வழங்கவுள்ளது.