உள்நாடு

சந்தையில் தேங்காய் எண்ணெய் மாபியா

(UTV | கொழும்பு) – நாட்டில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி சிங்கள, தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு விலையினை அதிகரிக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் தயாராகி வருவதாக பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தேங்காய் எண்ணெய் இருப்புக்களை மறைக்க பெரிய அளவிலான நிறுவனங்கள் ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளன என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் தற்போது நிலவும் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பொது அழைப்பாளர் புத்திக டி சில்வா இதனை தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா, பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் வீட்டு உபயோகத்திற்கு தேவையான 100 வீத எண்ணெயை உற்பத்தி செய்வதாக தெரிவித்தார்.

உள்ளூர் சுத்திகரிப்பு நிலையங்கள் மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் இருப்புக்களை தங்களுடைய சேமிப்புக் கிடங்குகளில் மறைத்து வைத்திருப்பதாக டி சில்வா கூறினார்.

பன்னாட்டு நிறுவனங்கள் தேங்காய் எண்ணெய்க்கான கேள்வியினை உருவாக்க முயற்சிப்பதாகவும், பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்துவதாகவும், அரசாங்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தியை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் தமது ஆதரவை வழங்க வேண்டுமென டி சில்வா இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Related posts

சாரதியை சரமாரியாக தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

யுகதனவி ஒப்பந்தம் – இரண்டாவது நாள் விசாரணைகள் ஆரம்பம்

முதலாம் தவ​ணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு