உள்நாடு

விமலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

(UTV | கொழும்பு) –  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் சந்தேகநபர்கள் 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (07) கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை மே 30ம் திகதி விசாரிக்க நீதவான் உத்தரவிட்டார்.

சாட்சிகளை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் பிணையில் விடுவிக்கப்பட்ட 6 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகினர்.

2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் இளவரசர் செயிட் அல் ஹுசைனை துன்புறுத்தியதாக விமல் வீரவன்ச மற்றும் ஆறு பேருக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிசார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, மொஹமட் முஸம்மில், வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் ரொஜர் செனவிரத்ன ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Related posts

கித்துல் – பனை உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை

போதைப்பொருள் சோதனைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் 

வயிற்று வலிக்கு வழங்கிய ஊசியால் யுவதி மரணம் : பேராதனை வைத்தியசாலையில் சம்பவம்