உள்நாடு

இரவு வேளையில் பஸ் சேவைகள் முற்றாக தடைப்படும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் 4,000 முதல் 5,000 வரையான தனியார் பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட வேண்டியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், இன்று (07) இயங்கும் தனியார் பேருந்துகளின் கொள்ளளவு 25 வீதமோ அல்லது அதற்கும் குறைவாகவோ காணப்படுகின்றது.

இரவு வேளையில் பஸ் சேவைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு நிதியுதவி வழங்க திட்டமில்லை

சானி அபேசேகரவுக்கு எதிரான விசாரனை காலம் நீடிப்பு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 100 பேர் வீடுகளுக்கு