(UTV | கொழும்பு) – சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட பல துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அதிகளவான பேக்கரிகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனது பேக்கரி பொருட்களை விற்பனை செய்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.