உள்நாடு

விதுர – தொலவத்த குறித்து கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஒழுக்காற்று விசாரணை தேவை என கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் அண்மையில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 கட்சி வேலைத்திட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.

இதேவேளை, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுப் பதவிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சரியானது என்பதை கட்சி என்ற ரீதியில் ஏற்றுக்கொள்கின்றோம் என சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் – சட்டமா அதிபரின் மீளாய்வுக்கு

இந்திய படகுகள் யாழில் ஏலம்

தாழமுக்கம் வலுப்பெறும் சாத்தியம்