விளையாட்டு

ரஷ்யா – உக்ரேன் மோதல் : சர்வதேச பராலிம்பிக் குழுவின் அதிரடி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – 2022 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால பராலிம்பிக் போட்டியில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சர்வதேச பராலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சீனாவின் பீஜிங்கில் நடைபெறும் குளிர்கால பாராலிம்பிக் போட்டியில் அவர்களுக்கு கலந்து கொள்ள முடியாது.

குளிர்கால பராலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா நாளை (04) நடைபெறவுள்ளதுடன் அதன் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.

மற்ற உறுப்பு நாடுகளின் எதிர்ப்பால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச பாராலிம்பிக் குழுத் தலைவர் என்ரு பார்சன்ஸ் தெரிவித்தார்.

Related posts

டோனியின் வீட்டுக்கு பாதுகாப்பு

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்க பரிந்துரை!

232 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இலங்கை