உள்நாடு

இன்றும் 7 1/2 மணித்தியாலம் இருளில்

(UTV | கொழும்பு) – எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றும் நாடு முழுவதும் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 5 மணி நேரமும், மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின் தடை அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு பின்னர் எவ்வித வெட்டுமின்றி மின்சார விநியோகம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த டிசம்பர் 03ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் இன்று முதல் முறையாக மக்களிடம் கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் தடைக்கான காரணத்தை கண்டறிவதே இதன் நோக்கம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் ஞாயிற்றுக் கிழமைகளில் திறக்கப்படவுள்ள மெனிங் சந்தை

விமான நிலையம் திறப்பு தொடர்பான அறிவித்தல்

தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்