உள்நாடு

உக்ரேன் – ரஷ்யா மோதல் : இலங்கை வாக்களிக்கவில்லை

(UTV | கொழும்பு) – உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை 141 நாடுகள் ஆதரித்தன, இலங்கை வாக்களிக்கவில்லை.

இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாவோஸ், மங்கோலியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பல நாடுகளுடன் இலங்கையும் தீர்மானத்திற்கு வாக்களிக்கவில்லை.

இந்தத் தாக்குதலின் “உலகளாவிய சீற்றத்தின் அளவை” இது காட்டுகிறது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

மேலும் இது “முன்னோடியில்லாத உலகளாவிய ஒற்றுமையை” வெளிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

வாக்களித்ததைத் தொடர்ந்து ஒரு உணர்ச்சிமிக்க உரையில், ஐ.நா.வுக்கான உக்ரைனின் தூதர் பொதுச் சபையில் இது “எங்கள் தலைமுறையின் வரையறுக்கும் தருணம்” என தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கை மின்சார சபை பேச்சாளர் நொயல் பிரியந்தவின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.ஜீவன் இராஜேந்திரன்

இரவு நேரப் பயணத்தடை : புதிய அறிவிப்பு

“21 பணிப்புறக்கணிப்பில் மாற்றமில்லை”