கேளிக்கை

பிரபல நடிகை நீரில் மூழ்கி பலி [VIDEO]

(UTV |  தாய்லாந்து) – நண்பர்கள் சிலருடன் படகு சுற்றுலா சென்ற பிரபல நடிகை ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 37 வயதான தாய்லாந்து நடிகை நிடா பட்சரவீரபோங் (Nida Patcharaveerapong) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சர்வதேச செய்திகளின்படி, பெப்ரவரி 26 அன்று விடுமுறைக்காக நைடா தனது ஐந்து நண்பர்கள் மற்றும் அவரது மேலாளருடன் ஸ்பீட் போர் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

பாங்காக்கில் உள்ள Rama VII Bridge பாலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது ஆற்றில் திடீரென விழுந்துள்ளார். அவர் பாதுகாப்பு ஜாக்கெட் கூட அணிந்திருக்கவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்து சினிமாவிலும், சின்னத்திரையிலும் பிரபலமான நடிகையான நைடா, ‘The Fallen Leaf (2019) என்ற நாடகத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

நைடாவின் தாய் பணிடா, தனது மகளை யாரோ ஆற்றில் தள்ளிவிட்டதாக சந்தேகம் இருப்பதாக போலிசில் முறையிட்டுள்ளார்.

காணொளி : ដំណឹងកម្ពុជា_CambodiaNews

Related posts

‘இந்தியன்-2’ படத்தில் புரட்சிப் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா?

‘சர்தார்’ பட டீசர் வெளியானது

விஜய்யுடன் இணையும் ஜீவா