உள்நாடு

இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றைய மின்வெட்டு தொடர்பில் கண்டனம்

(UTV | கொழும்பு) – கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்று வரும் இவ்வேளையில் இன்றைய தினம் 7 1/2 மணித்தியால மின்வெட்டு அட்டவணை மாணவர்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதுகுறித்து, ஒன்றிய முதன்மைச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில்;

“.. குழந்தைகளின் எதிர்காலத்தை நிலைநிறுத்தும் அரசாங்கம் எனின், இதுபோன்ற முடிவை ஒருபோதும் எடுத்திருக்காது என்றார்.

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தற்போதைய உயர்தரப் பரீட்சையை பரிசீலித்திருக்க வேண்டும்.

தற்போதைய மின் நெருக்கடி இயற்கையான காரணங்களால் ஏற்படவில்லை என்றும் அரசின் நிதி முறைகேடு காரணமாக ஏற்பட்டுள்ளது.

அரசின் கொள்கைகளால் குழந்தைகள் சிரமங்களை எதிர்கொள்வதால், அரசு உடனடியாக தீர்வுகளை வழங்க வேண்டும்..” என வலியுறுத்தினார்.

Related posts

மட்டு பல்கலை: கட்டுப்பாடு தொழில்நுட்ப கல்லூரிக்கு – பாதுகாப்பு பேரவை

இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு மன்னிப்பு கடிதம்

ஹரின், மனுஷ கட்சியில் இருந்து இடைநிறுத்தம்