(UTV | கொழும்பு) – சிசுக்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் களஞ்சியசாலைகளில் தற்போது திரிபோஷ இல்லை என குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே, கிளினிக்குகளுக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
திரிபோச உற்பத்திக்கான சோளத்தின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால் கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு திரிபோஷ வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தினந்தோறும் திரிபோஷ உற்பத்திக்கு சுமார் 70 மெட்ரிக் தொன் சோளம் தேவைப்படுகிறது.
தேவையான அளவு மக்காச்சோளத்தை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால், சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்த போதிலும், அதுவும் முடங்கியுள்ளது.
மேலும், திரிபோஷ உற்பத்திக்குத் தேவையான முழு பால் பவுடரைப் போதுமான அளவு பெற முடியாது.