உள்நாடு

பாப்பரசரை சந்திக்கின்றார் கொழும்பு பேராயர் மல்கம்

(UTV | கொழும்பு) – கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று (28) வத்திக்கானில் உள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

ரோம் நேரப்படி காலை 11 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் குறித்து இருவரும் கலந்துரையாடுவார்கள் என வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து பேராயர் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் சர்வதேச உதவியை நாட கடந்த 24 ஆம்திகதி கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விசேட தூதுக்குழுவினருடன் வத்திகான் நோக்கி பயணித்துள்ளார்.

Related posts

பசிலுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

ஒக்டோபர் முதலாம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கம்

மஹிந்தானந்தவை விரட்டும் கொரோனா