உள்நாடு

மற்றுமொரு கொவிட் திரிபு ஏற்படும் அபாயம்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இடம்பெறும் கச்சேரிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களால் எதிர்காலத்தில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தடுப்பூசிக்கு பதிலளிக்காத கொவிட் வகையை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

“..இலங்கையின் பல பாகங்களிலும் தற்போது இசை நிகழ்ச்சிகள் என பல பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது, எதிர்வரும் மாதங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இருந்தாலும் இதன் பாதிப்புகள் ஒரே நாளில் கிடைப்பதில்லை. நாடளாவிய ரீதியாக ஏராளமான கொவிட் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இருப்பினும் தொற்றாளர்கள் எண்ணிக்கை எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை மற்றும் இலங்கையில் தொற்றாளர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் தடுப்பூசிக்கு பதிலளிக்காத கொவிட்டின் ஒரு புதிய திரிபின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும், இது நம் அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும், எனவே இந்த ஆபத்திற்கு இடமளிக்க வேண்டாம்..”

Related posts

பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

எதிர்வரும் 03 நாட்களுக்கு எரிபொருள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்

இன்று சர்வதேச ஜனநாயக தினம்