(UTV | கொழும்பு) – உக்ரைனில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஒருங்கிணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான தகவல்களுக்கு 24 மணிநேரமும் செயற்படக்கூடிய தொலைபேசி இலக்கங்களும் தரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
+90-534-456-9498,
+90-312-427-1032
இதேவேளை, உக்ரைனில் வசிக்கும் 14 மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.