(UTV | கொழும்பு) – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.
ஜனாதிபதியை சந்தித்து மகஜரொன்றை கையளிக்கவே தாம் வந்ததாக தெரிவித்த போதிலும், இன்று (24) ஜனாதிபதியை சந்திப்பதாக முன்னறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
ஜனாதிபதி இன்று காலை தான் முன்னர் பயன்படுத்திய வேலைத்திட்டத்திற்கு சென்றுள்ளார். பிரதமரைச் சந்திப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் கூட்டத்திற்குச் செல்லாமல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னறிவிப்பின்றி ஜனாதிபதி அலுவலகத்தில் இல்லாத போது நடத்தப்பட்ட இந்தப் போராட்டம், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தை தவறாக வழிநடத்தும் திட்டமிட்ட சதி என்பது தெளிவாகிறது.
PMD-