கிசு கிசுவகைப்படுத்தப்படாத

ஷானியின் உயிருக்கு ஆபத்து [VIDEO]

(UTV | கொழும்பு) – குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் உயிருக்கு பாரிய ஆபத்து இருப்பதாகவும், அவரை இலக்கு வைத்து அரசாங்கத்தின் கொள்கை மிகவும் வருந்தத்தக்கது மற்றும் அச்சம் தருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மிகக் கொடூரமான முறையில் “இயற்கை படுகொலை”க்குள் தள்ளப்படுகிறார் என்ற நியாயமான சந்தேகம் எமக்கு உள்ளது.

இதற்கு முன்னரும் ஷானி அபேசேகரவின் வாழ்க்கையை பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

நவம்பர் 27, 2020 அன்று நாங்கள் இதை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினோம். இன்று எல்லாமே கண்மூடித்தனமான முடிவுகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில் ஷானி அபேசேகரவின் வாழ்க்கை குறித்து எமக்கு நியாயமான அச்சம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

தபால் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பம்

நான்கு வாள்களுடன் ஒருவர் கைது

வெள்ள அபாயம்: மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தல்