உள்நாடு

எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான யுத்த சூழலுக்கு ஏற்ப உலக சந்தையில் எண்ணெய் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும், இது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கொவிட் 19 நிதியத்திற்கு 3 மில்லியன் ரூபாய் நன்கொடை

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 10% அதிகரிப்பு

இலங்கையில் நிலநடுக்கம்!