உள்நாடு

அரச நிறுவனங்களுக்கான சுற்றறிக்கை இன்று வெளியாகும்

(UTV | கொழும்பு) – மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும் சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது.

இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.

இதன் கீழ் அரச நிறுவனங்களில் குளிரூட்டிகள் மற்றும் தேவையற்ற விளக்குகளின் பாவனையை குறைக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு அரச வாகனங்களுக்கு எரிபொருளை பயன்படுத்த வேண்டாம் என அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அரச நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கு வெளியில் இருந்து அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்தி கொழும்புக்கு அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வருமானத்தை இழந்துள்ள பேரூந்து ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம்

வறட்சி காலநிலை – 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ; 77 பேர் கைது