கிசு கிசு

அமைச்சர் நிமல் சிறிபாலவின் வாகனத்திற்கும் டீசல் இல்லையாம்

(UTV | கொழும்பு) – இன்று முழு நாட்டு மக்களும் இறுக்கமான பொருளாதாரத்தினை கடைப்பிடித்து வருவதால் நாங்கள் சொல்வதை அரசாங்கம் செவிமடுப்பதில்லை என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

வெலிமடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இன்று நாடு முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. டீசலுக்கு பஞ்சம். நான் பதுளையில் இருந்து வரும்போது டீசல் இல்லை என்று சொன்னார்கள். கொழும்பில் இருந்தாவது கொண்டு வாருங்கள் எனச் சொன்னேன்.

அரசாங்கம் மட்டுமல்ல, முழு நாடும் இன்று ஸ்தம்பித்துள்ளது. அன்றன்றுக்கு தேவையான பொருளாதார வசதியுடன் தான் நாம் இருக்கிறோம். இன்று இந்தியாவில் இருந்து ஒரு பில்லியன் டாலர்களை கோரியுள்ளோம்.

அதை வைத்துத் தான் எரிபொருள் கொண்டுவர உள்ளோம். மீண்டும் நாளைக்கு இன்னொரு வழி. இப்படித்தான் நாம் நாட்களை கடத்துகிறோம்..” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

ரசிகரை வியப்பில் ஆழ்த்திய டோனி… வைரலாகும் வீடியோ

பசிலும் இராஜினாமா : இடைக்கால அரசில் பசிலுக்கு எந்தப் பதவியும் இல்லையாம்

போலி கடன் அட்டைகள் பயன்பாடு…