உள்நாடு

மீண்டும் மின்சாரம் தடைப்படும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – பல மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்ததன் காரணமாக மீண்டும் மின்சாரம் தடைப்படும் சாத்தியம் நிலவி வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவற்றுள் நாட்டின் முக்கிய மின் உற்பத்தி நிலையமான களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் உள்ள இரட்டை சுழற்சி மின் உற்பத்தி நிலையம் ஒன்று. மத்துகம, கொலன்னாவ மற்றும் துல்ஹிரிய மின் உற்பத்தி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதற்கு டீசல் மற்றும் நாப்தா பற்றாக்குறையே காரணம் தெரிவிக்கப்படுகின்றது.

மின்சாரத் தடை காரணமாக தேசிய மின்வட்டத்திற்கான மின்சாரம் 490 மெகாவோட்டாக குறைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார். இன்று இந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு கிடைக்காவிட்டால் தடையில்லா மின்சாரம் வழங்குவது சவாலாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று நாட்டின் அதிகபட்ச மின்சாரத் தேவை 2,626 மெகாவாட்டாக இருந்தது. இதில், 74.11 சதவீதம் நிலக்கரி மற்றும் எரிபொருளால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. நீர் மின் உற்பத்தி 23.11% ஆக குறைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திடீர் மரணம்!

NPP பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

editor

தொடர்ந்தும் மண்சரிவு