உள்நாடு

எரிபொருள் வரியை நீக்குமாறு எரிசக்தி அமைச்சர் நிதி அமைச்சரிடம் கோரிக்கை

(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குமாறு நிதி அமைச்சரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தொடர் நட்டங்களை எதிர்நோக்கும் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளை பேணுவதில் உள்ள சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் தொடர்பில் நாட்டின் தற்போதைய நிலைமையை விளக்கி இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தன்னிடம் நாளாந்தம் கோரிக்கை விடுப்பதாகவும், அவ்வாறான கோரிக்கைகள் அனைத்தும் நிதியமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Related posts

பண்டாவளை – பூனாகலை கபரகல மண்சரிவு

கலாநிதி ஷிரான் உபேந்திர தெரணியகல காலமானார்

சரண குணவர்தனவிற்கு பிணை [VIDEO]