(UTV | கொழும்பு) – பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் இன்று முதல் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை வழங்க இலங்கை ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
பயணிகள் இணையத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முடியும் அல்லது கையடக்க தொலைபேசி செயலி மூலம், ஆன்லைன் முறைமையின் ஊடாக இருக்கையை முன்பதிவு செய்ய முடியும் என இலங்கை புகையிரத சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த மொபைல் அப்ளிகேஷன் விரைவில் பதிவிறக்கம் செய்யப்படும் என ஜெயசுந்தர தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டம் ஆரம்ப கட்டமாக இன்று முன்னெடுக்கப்படும் எனவும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் இந்த வசதி கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சேவையை சீரமைக்க ஆரம்ப கட்டத்தில் தரவுகளை சேகரிப்போம் எனத் தெரிவித்திருந்தார்.
மொபைல் அப்ளிகேஷன்களின் android மற்றும் iOS பதிப்புகள் விரைவில் கிடைக்கும் என்றும், பயணிகள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தியும் பணம் செலுத்த முடியும் என்றும் ஜெயசுந்தர மேலும் தெரிவித்திருந்தார்.