உள்நாடு

இன்று 36 மணிநேர நீர்வெட்டு

(UTV | கொழும்பு) –  கொழும்பின் பல பகுதிகளில் இன்று (18) காலை 10 மணி முதல் 36 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (18) காலை 10 மணி முதல் நாளை (19) இரவு 10 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு 01, 07, 09, 10 மற்றும் 12 ஆகிய இடங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு 08 மற்றும் 11 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இம்ரான் கானிடம் 13 வயது இலங்கை சிறுவன், விடுத்துள்ள பகிரங்க வேண்டுகோள் [VIDEO]

சுமார் 8000 அடி உயரத்தில் இருந்து குதித்த பரசூட் வீரர் பலி

கொழும்பு குப்பை புதிய இடத்திற்கு