உள்நாடு

நான்காவது டோஸ் யாருக்கு?

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட நாடுகளின் தேவைக்கு ஏற்ப நான்காவது டோஸ் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத், அந்த நாடுகளிடம் இருந்து அவ்வாறான தடுப்பூசிகள் கோரப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் தேவையான தடுப்பூசிகள் அந்த நாடுகளால் தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, தடுப்பூசிக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு நபரின் தேவையும் முறையாகக் கண்டறியப்பட்டு உரிய அளவு வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

பல சந்தர்ப்பங்களில் உயர்கல்விக்காக வெளிநாடு செல்பவர்கள் இவ்வாறான தடுப்பூசிகளுக்கு முன்னர் விண்ணப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

ஊடக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

டிக்கோயா தரவளை பிரதேசம் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டது