உள்நாடு

DNA அறிக்கைகளை வெளியிடுவதில் சிக்கல்

(UTV | கொழும்பு) – நீதித்துறை செரோலஜி (Judicial Serology) மற்றும் டி.என்.ஏ (DNA) பகுப்பாய்வு பிரிவின் அறிக்கைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

குறித்த பரிசோதனைகளுக்குத் தேவையான இரசாயனப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி செய்வதில் உள்ள தடைகள் காரணமாகவே தாமதங்கள் ஏற்படுவதாக குறித்த ஆய்வாளர்கள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆய்வாளர் துறையின் தடயவியல் உடலியக்க மற்றும் டிஎன்ஏ பகுப்பாய்வு பிரிவுகள் மாதத்திற்கு சுமார் 150 வழக்குகளைப் பெறுகின்றதோடு மாதத்திற்கு சுமார் 200 அறிக்கைகளை வெளியிடுகின்றன.

இந்த சோதனைகளுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து விஷேட இரசாயனங்களும் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும், குறித்த இரசாயன பொருட்களை திட்டமிட்டபடி விநியோகிக்க முடியாது எனவும் சம்பந்தப்பட்ட இரசாயன விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து இரசாயனத்தை இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு நாணயங்களை மாற்றுவதில் சிரமம் மற்றும் இரசாயன உற்பத்தியில் இடையூறு ஏற்பட்டதன் காரணமாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, நீதித்துறை செரோலஜி மற்றும் டி.என்.ஏ பகுப்பாய்வு பிரிவுகள் உரிய அறிக்கைகளை வழங்குவதில் தாமதம் ஏற்படும் எனவும், வழமை போன்று இரசாயனங்கள் பெறப்பட்டதன் பின்னர் திட்டமிட்டபடி அறிக்கை வெளியிடப்படும் எனவும் பகுப்பாய்வாளர் திணைக்களம் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு மேலும் அறிவித்துள்ளது.

Related posts

நிலவும் காலநிலை தொடர்பில் பாடசாலைகளுக்கு சுற்றறிக்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்சினை தனியார் மயப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டது

editor

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி, ஜனாதிபதி அநுரவை சந்தித்தார்

editor