(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் இந்த வருடம் 25 சுற்றுலா கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஒவ்வொரு திட்டத்திற்காகவும் 10 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்திற்குள் குறைந்தபட்சம் 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.