உள்நாடு

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTV | கொழும்பு) – பதினெட்டு சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 8 மணி தொடக்கம் 14 நாட்களுக்கு தமது வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் நிபுணர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சருடன் நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் இன்று மாலை எடுக்கப்படும் என சுகாதார தொழில் நிபுணர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் முன்னதாக தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 10,413 பேர் கைது

சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு மீண்டும் கூடுவதற்கு தீர்மானம்

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் பொய்யான செய்தி பற்றி பொலிஸார் அறிக்கை