உள்நாடு

அரசு ஜனநாயக உரிமைகளை இரத்து செய்து வர்த்தமானியை வெளியிட்டுள்ளது

(UTV | கொழும்பு) – பல சேவைகளை இன்றியமையாததாக மாற்றும் அரசாங்கத்தின் முடிவு பொதுமக்களின் சிவில் உரிமைகளை மீறுவதாகும் என மருத்துவ சேவைகளின் கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவ சேவைகளின் கூட்டு தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவிக்கையில்; வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் ஜனநாயக உரிமைகளை அரசாங்கம் இரத்து செய்துள்ளதாக வலியுறுத்தினார்.

சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மூன்றரை மாதங்களாக முயற்சித்ததாகவும், ஆனால் அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் குமுதேஷ் கருத்து தெரிவித்தார்.

மேலும், வரவிருக்கும் வேலைநிறுத்தம் குறித்து பலமுறை எச்சரித்தும் சுகாதாரத்துறை செயலர் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே இந்த வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்திருந்தால், பிரச்சினைகளுக்கு நடைமுறையில் தீர்வு காண முடியும் என்றார்.

மாறாக தொழிற்சங்கங்களின் உரிமைகளை மீறும் வகையில் ஒரு அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது என்று குமுதேஷ் குற்றஞ்சாட்டி இருந்தார்.

ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு குறித்து இதுவரை தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்பதையும் குமுதேஷ் நினைவு கூர்ந்தார்.

தற்போது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து வருவதாகவும், தடை உத்தரவு உத்தியோகபூர்வமாக அவர்களிடம் கையளிக்கப்பட்டதும் பதிலளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

நாடு முழுவதும் தட்டம்மை தடுப்பூசி திட்டம்!

அதிவேக வீதிகள் ஒரு நிறுவனத்தின் கீழ்

க்ளைபோசைட் தடையை நீடிக்கும் வர்த்தமானி அரச அச்சகத்துக்கு