உள்நாடு

வவுனியா பல்கலைக்கழகம் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்

(UTV |  வவுனியா) – இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக, வவுனியா பல்கலைக்கழகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (11) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா – பம்பைமடு பகுதியில் இந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

வவுனியா பல்கலைக்கழகமானது, 1991ஆம் ஆண்டு வட மாகாணத்தின் இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு, 1997ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது.

கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம், இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் தரமுயர்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலதிக வட்டியுடன் விசேட வங்கிக் கணக்கு

முத்துராஜவுக்கு பதிலாக மூன்று பறவைகளை இலங்கைக்கு வழங்கிய தாய்லாந்து!

வெள்ளிக்கிழமை முதல் கிடைக்கவுள்ள விசேட கொடுப்பனவு!