உள்நாடு

சட்ட ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) – நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்துப் பிரதிவாதிகளான தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளதாக சட்டமா அதிபர் முறைப்பாடு ஒன்றினை நேற்றைய தினம் முன்வைத்திருந்தார்.

இந்த முறைப்பாட்டை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், குறித்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

எவ்வாறிருப்பினும், தாதியர், இடைநிலை மற்றும் நிறைவுகாண் சேவை தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள நாடு தழுவிய போராட்டத்தைக் கைவிடுவதற்கு, நீதிமன்றால் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு குறித்து தமக்கு இதுவரையில் அறியப்படுத்தப்படவில்லையென அந்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், நீதிமன்ற நடவடிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சு செயற்படுவதாக 3 நாட்களுக்கு முன்னர் தாங்கள் அறிந்ததாக ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் தீர்மானம் குறித்த அறியப்படுத்தல் வழங்கப்பட்டால், நீதிமன்றத்திற்கு மதிப்பளித்து, சட்ட ஆலோசனைகளுக்கு அமைய, போராட்டம் தொடர்பான அடுத்த நடவடிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இந்தியாவின் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் நாட்டுக்கு வருவதில் தாமதம்

Update – நீரில் மூழ்கி உழவு இயந்திரம் விபத்து – காணாமல் போன மற்றுமொரு மாணவனின் சடலம் மீட்பு

editor

புறக்கோட்டை சுமை தூக்கும் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு