உலகம்

கொரோனா மசியவில்லை : 4வது பூஸ்டர் தேவைப்படலாம்

(UTV | கொழும்பு) – உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சம் பேர் இறந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் தெரிவித்தார். அமெரிக்காவில் மட்டும் 1 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனாவை முழுமையாக அகற்ற 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி வுசி கூறியதாவது:-

“..கொரோனா உருமாறிய வைரசான ஒமைக்ரானை எதிர்த்து போராட அமெரிக்காவில் 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம். பூஸ்டர் தவணை தடுப்பூசி என்பது வயது மற்றும் பாதிப்பு அடிப்படைகளில் இருக்கலாம். 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி போடுவது வெளிப்படையாகவே பின்பற்றப்படும்.

6 மாதங்கள் முதல் 2 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் 21 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி சோதனைகள் பைசர் மருத்துவ நிறுவனத்தால் நடத்தப்பட்டுள்ளன..”

Related posts

கொரோனாவுக்கு பலியான முதல் ஜனாதிபதி

இந்தியா மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தை கொண்டுள்ள சிறந்த நாடு : முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் புகழாரம்

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பில் இருந்தும் வெளியேறிய ரஷ்யா!