கொழும்பு புதுக்கடக நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி, படகு மூலம் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவர் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் சுமார் இருநூறு இடங்களில் சோதனை நடத்திய போதிலும், அவர் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
அவர் தொலைபேசியைப் பயன்படுத்துவதையும் நிறுத்திவிட்டதால், அவரைப் பற்றிய எந்த தடயத்தையும் கண்டுபிடிப்பதில் பொலிஸாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும், அவர் தென் மாகாண கடற்கரை வழியாக நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், அவர் தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்திய புலனாய்வு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ள பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.