பதுளை – பசறை வீதியில் 04 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, காரில் பயணித்த பெண் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.