உள்நாடுபிராந்தியம்

200 அடி பள்ளத்தில் விழுந்து கார் விபத்து – மூவர் படுகாயம்

பதுளை – பசறை வீதியில் 04 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது.

கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, காரில் பயணித்த பெண் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும்

பாதுகாப்புப் படையினரை கட்டுப்படுத்த எவருக்கும் இடமளிக்க முடியாது – ரணில் விக்ரமசிங்க.

நீதிமன்றை அவமதித்த மைத்திரி மீது மனு தாக்கல்!